Monday, July 19, 2010

Prabodha


 

Other Expenses( Please give details of other Expenses)


 

Purchased RN Office electronic equipment

1. Motherboard for finance computer

2. RAM for finance computer

3. Processor for finance computer

4. Pen Drive for finance consultant


 

Total Other Expenses    

Tuesday, March 31, 2009

வன்னி மக்களைப் பாதுகாக்கவேண்டுமென்ற தேவைப்பாடு அரசிற்குண்டா?

தாரா சிறீராம்

வன்னியில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான வன்னி மக்களின் உண்மைநிலையினை கண்டறியும்பொருட்டு நாங்கள் அப்பிரதேசங்களில் சமூகசேவையில் ஈடுபடுபவர்களையும், மதகுருமார்கள், மனிதஉரிமை ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தோம். எமது சுற்றுப்பயணத்தின்போது கிடைத்த தகவல்களின்படி வன்னி மக்களின் வாழ்க்கை பின்வருமாறு அமைகின்றது.

யுத்தக் காரணங்களினால் இற்றைக்கு வன்னியிலுள்ள மொத்த சனத்தொகையாகிய 419000; பேரில் இடம்பெயர்ந்துள்ளோர் 315000 பேர் ஆவர், இவர்களில் அதிகமானோர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர் என்பதுடன் அரசினால் பாதுகாப்பு வலயமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விஸ்வமடு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசங்களில் தங்கியுள்ளனர். அரசு இவ்வாறு சூனியப்பிரதேசங்களாகக் குறிப்பிட்டுள்ள இடப்பரப்பு 10 கிலோமீற்றர் சதுரப்பரப்புடையதாகும். ஆனால் இடம்பெயர்ந்துள்ளோர் தொகை 315000 பேராகும். இவ்வாறான ஒரு எண்ணிக்கைக்கு இவ் 10கிலோமீற்றர் சதுரப்பரப்பு போதுமானதா என்பது ஒரு பிரச்சனையாகும். எமது கருத்துப்படி இது எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பதாகும்.

Read more...

Monday, March 30, 2009

மக்களைக் கொடுமைப்படுத்துவது பொதுவில் நிறுத்தப்படவேண்டியதாகும்

அன்டனி விக்டர் சோ செ அடிகள்
மன்னார்

கலந்துரையாடியது –
தாரா சிறீராம்

தற்போது அரசின் யுத்த நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், மன்னாரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதிப்படைந்துள்ளது?

தற்போதைய அரசின் இந்த யுத்த செயற்பாடு போக்குவரத்து உட்பட அனைத்து விடயங்களிலும் தாக்கஞ்செலுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி மற்றும் தொடர்பாடல் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடப்பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம்விட மிகமுக்கியமான விடயம் இங்குள்ள மக்கள் அனைவரும் மனரீதியில் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இவர்களது உறவுகள் வன்னிப் பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் சுக துக்கங்களை அறியமுடியாமலுள்ளது. இந்த யுத்த நிலைமையினால் இங்கு வாழும் மக்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கின்றனர்.

அகதிமுகாம்கள் சிறைச்சாலைகள் போன்று காட்சியளிக்கின்றது

ருகி பிரணாந்து கொழும்பில் அமைந்துள்ள பிரபலமான மனிதஉரிமை அமைப்பாகிய Law and Spciety Trustஇன் இணைப்பாளராவார். மிகவும் பிரபல்யமான மனிதஉரிமைப் பாதுகாவலராகிய இவர் சில நாட்கள் பாங்கொக் நாட்டில் அமைந்துள்ள Forum Asiaவின் இணைப்பாளராகவும் கடமையாற்றினார். சில நாட்களுக்குமுன் மன்னார் பிரதேசத்தை பார்வையிட்டதன்பின் இவர் ‘சமபிம’விற்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு.

இன்று அனைவரும் யுத்தத்தைப் பற்றிபேசும்போது நீங்கள் மாத்திரம் ஏன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடச் சென்றீர்கள்?


சாதாரணமாக எமது கருத்து வட, கிழக்கு மாவட்டங்கள் ஓமந்தையிலிருந்தே பிரிய ஆரம்பிக்கின்றன என்பதாகும். இருப்பினும் எமது சுற்றுப்பயணத்தின் பின் கண்ட விஷேடமான ஒரு விடயம் யாதெனின் இப்பொழுது நாடு மதவாச்சியில் பிளவுபடுத்தப்படுகின்றதென்பதாகும். கொழும்பிலிருந்து அல்லது வேறொரு பிரதேசத்திலிருந்து வவுனியாவிற்கு அல்லது மன்னாரிற்கு செல்ல விரும்புவர்கள் மதவாச்சியிலுள்ள சோதனைச்சாவடியில் இறங்கி அதிலிருந்து வேறொரு வாகனத்தில்தான் செல்லவேண்டியுள்ளது. வவுனியாவரை சென்ற ரயில்கள் தற்பொழுது செல்வது மதவாச்சிவரைக்கும் மாத்திரமே. காலை 3.45, 7.30 மற்றும் இரவு 10.30ற்கும் மதவாச்சியிலிருந்து புறப்படும் ரயில்கள் மன்னாரிலிருந்து வரும் எவராலும் ஏற முடியாது. காரணம் மன்னார் வீதி காலை 6.00மணிக்குத்தான் திறக்கப்படுகின்றது. இந்த நேரங்கள் காலநேர அட்டவணையின் பிரகாரம் தயாரிக்கப்பட்டவை எனவே மன்னார் வாசிகளுக்கு இவற்றில் பயணிப்பதற்கு சரியான நேரத்திற்கு மதவாச்சிக்கு வரமுடியாதுள்ளது. பொருட்களைக் கொண்டுசெல்லும்போதுகூட மதவாச்சியைக் கடப்பதாயின் வேறு வாகனங்களையே ஒழுங்குபடுத்தவேண்டியள்ளது. இச்சந்தர்ப்பத்தில் வாகனங்களுக்குரிய கூலி பலமடங்குகளாக