Tuesday, March 31, 2009

வன்னி மக்களைப் பாதுகாக்கவேண்டுமென்ற தேவைப்பாடு அரசிற்குண்டா?

தாரா சிறீராம்

வன்னியில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான வன்னி மக்களின் உண்மைநிலையினை கண்டறியும்பொருட்டு நாங்கள் அப்பிரதேசங்களில் சமூகசேவையில் ஈடுபடுபவர்களையும், மதகுருமார்கள், மனிதஉரிமை ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தோம். எமது சுற்றுப்பயணத்தின்போது கிடைத்த தகவல்களின்படி வன்னி மக்களின் வாழ்க்கை பின்வருமாறு அமைகின்றது.

யுத்தக் காரணங்களினால் இற்றைக்கு வன்னியிலுள்ள மொத்த சனத்தொகையாகிய 419000; பேரில் இடம்பெயர்ந்துள்ளோர் 315000 பேர் ஆவர், இவர்களில் அதிகமானோர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர் என்பதுடன் அரசினால் பாதுகாப்பு வலயமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விஸ்வமடு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசங்களில் தங்கியுள்ளனர். அரசு இவ்வாறு சூனியப்பிரதேசங்களாகக் குறிப்பிட்டுள்ள இடப்பரப்பு 10 கிலோமீற்றர் சதுரப்பரப்புடையதாகும். ஆனால் இடம்பெயர்ந்துள்ளோர் தொகை 315000 பேராகும். இவ்வாறான ஒரு எண்ணிக்கைக்கு இவ் 10கிலோமீற்றர் சதுரப்பரப்பு போதுமானதா என்பது ஒரு பிரச்சனையாகும். எமது கருத்துப்படி இது எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பதாகும்.

Read more...

Monday, March 30, 2009

மக்களைக் கொடுமைப்படுத்துவது பொதுவில் நிறுத்தப்படவேண்டியதாகும்

அன்டனி விக்டர் சோ செ அடிகள்
மன்னார்

கலந்துரையாடியது –
தாரா சிறீராம்

தற்போது அரசின் யுத்த நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், மன்னாரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதிப்படைந்துள்ளது?

தற்போதைய அரசின் இந்த யுத்த செயற்பாடு போக்குவரத்து உட்பட அனைத்து விடயங்களிலும் தாக்கஞ்செலுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி மற்றும் தொடர்பாடல் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடப்பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம்விட மிகமுக்கியமான விடயம் இங்குள்ள மக்கள் அனைவரும் மனரீதியில் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இவர்களது உறவுகள் வன்னிப் பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் சுக துக்கங்களை அறியமுடியாமலுள்ளது. இந்த யுத்த நிலைமையினால் இங்கு வாழும் மக்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கின்றனர்.

அகதிமுகாம்கள் சிறைச்சாலைகள் போன்று காட்சியளிக்கின்றது

ருகி பிரணாந்து கொழும்பில் அமைந்துள்ள பிரபலமான மனிதஉரிமை அமைப்பாகிய Law and Spciety Trustஇன் இணைப்பாளராவார். மிகவும் பிரபல்யமான மனிதஉரிமைப் பாதுகாவலராகிய இவர் சில நாட்கள் பாங்கொக் நாட்டில் அமைந்துள்ள Forum Asiaவின் இணைப்பாளராகவும் கடமையாற்றினார். சில நாட்களுக்குமுன் மன்னார் பிரதேசத்தை பார்வையிட்டதன்பின் இவர் ‘சமபிம’விற்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு.

இன்று அனைவரும் யுத்தத்தைப் பற்றிபேசும்போது நீங்கள் மாத்திரம் ஏன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடச் சென்றீர்கள்?


சாதாரணமாக எமது கருத்து வட, கிழக்கு மாவட்டங்கள் ஓமந்தையிலிருந்தே பிரிய ஆரம்பிக்கின்றன என்பதாகும். இருப்பினும் எமது சுற்றுப்பயணத்தின் பின் கண்ட விஷேடமான ஒரு விடயம் யாதெனின் இப்பொழுது நாடு மதவாச்சியில் பிளவுபடுத்தப்படுகின்றதென்பதாகும். கொழும்பிலிருந்து அல்லது வேறொரு பிரதேசத்திலிருந்து வவுனியாவிற்கு அல்லது மன்னாரிற்கு செல்ல விரும்புவர்கள் மதவாச்சியிலுள்ள சோதனைச்சாவடியில் இறங்கி அதிலிருந்து வேறொரு வாகனத்தில்தான் செல்லவேண்டியுள்ளது. வவுனியாவரை சென்ற ரயில்கள் தற்பொழுது செல்வது மதவாச்சிவரைக்கும் மாத்திரமே. காலை 3.45, 7.30 மற்றும் இரவு 10.30ற்கும் மதவாச்சியிலிருந்து புறப்படும் ரயில்கள் மன்னாரிலிருந்து வரும் எவராலும் ஏற முடியாது. காரணம் மன்னார் வீதி காலை 6.00மணிக்குத்தான் திறக்கப்படுகின்றது. இந்த நேரங்கள் காலநேர அட்டவணையின் பிரகாரம் தயாரிக்கப்பட்டவை எனவே மன்னார் வாசிகளுக்கு இவற்றில் பயணிப்பதற்கு சரியான நேரத்திற்கு மதவாச்சிக்கு வரமுடியாதுள்ளது. பொருட்களைக் கொண்டுசெல்லும்போதுகூட மதவாச்சியைக் கடப்பதாயின் வேறு வாகனங்களையே ஒழுங்குபடுத்தவேண்டியள்ளது. இச்சந்தர்ப்பத்தில் வாகனங்களுக்குரிய கூலி பலமடங்குகளாக

Wednesday, March 25, 2009

பயங்கரவாதமும் பயங்கரவாதியும்: வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லிற்கு (ஆக)

எனக்குத்தெரிந்த ஒரு நபர் ‘புபே’ (Buffet) என்ற சொல்லிற்குரிய கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டார். “விரும்பியளவிற்குப் பகிர்ந்துண்ணுங்கள்”. உண்மையும் இதுதான் ‘புபே’ என்ற பிரெஞ்சுச் (French) சொல் இலங்கையில் புளக்கத்திற்கு வந்ததும் புகையிரத நிலையங்களில் காணப்பட்ட ‘புபே’ அனைத்தும் பவட் ஆகமாறியது. இதன்பின் உணவகங்களிலும், திருமண இல்லங்களிலும் ‘புபே’ பழக்கத்திற்கு வர ஆரம்பித்தது. இருப்பினும் இச்சொல்லுக்குரிய சரியான மொழிபெயர்ப்பை சிங்களமொழியில் கொடுக்கக்கூடிய ஒருவர் இலங்கைப் பிரஜையாகிய சபாநாயகர் மாத்திரமே.

இதேபோன்றுதான் எமது மொழியுடன் சேர்ந்த இன்னுமொரு சொல் Terrorism மாகும். இது ஒரு லத்தீன் சொல்லாகும், பின் இது ஆங்கிலத்துடன் கலந்து எம்மிடம் புழக்கத்தில் வந்தவுடன் நாம் இதனை பயங்கரவாதமென்று அழைத்தோம். (Terror- பயங்கர, ism- வாதி Terrorism- பயங்கரவாதி) ‘புபே’ என்பதைப்போல் பயங்கரவாதத்தையும் தெளிவுபடுத்துவது மிகவும் கடினமான ஒரு செயலாகும். பயங்கரவாதத்தை விளக்க ஒரு வரைவிலக்கணம் இல்லை. இதனால் இக்கடிதத்தைப் படிப்பவர் இவ்வாறு இதைக் குறிப்பிடுவர், “மடையர்களே சற்று உங்களை சூளவுள்ள நிலையினை அவதானியுங்கள், எமது நாட்டில் மாத்திரமல்ல, எமது இன்பத்திலும் துன்பத்திலும் எமக்குத் துணைநிற்கும் பாகிஸ்தானைக்கூட பயங்கரவாதம் அழித்துள்ளது. இதனால் இன்னமும் இதற்கென்று தனி விளக்கமும் வேண்டுமா? பயங்கரவாதமென்பது பயங்கரவாதம்தான்.”

Tuesday, March 24, 2009

தமிழினத்தவர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றல் தடைசெய்யப்பட்டது

கடந்த 2007ம் ஆண்டு ஆனி மாதம் 7ம் திகதியன்று கொழும்பு லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்கள் எவ்வித காரணமும் கூறாமல் மீண்டும் வவுனியாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் பாதுகாப்புத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனி மாதம் 7ம் திகதி பொழுது விடிவதற்கும் முன்பாக ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட பஸ்வண்டிகளுடன் லொட்ஜ்களைநோக்கி வந்திறங்கிய பாதுகாப்புப்படையினர், தமிழினத்தவர்களுக்கு சொந்தமான லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்புத்தரப்பினரால் கொண்டுவரப்பட்ட பஸ்வண்டிகளில் ஏறுவதற்கு வழங்கிய நேரம் 30 நிமிடங்கள் மாத்திரமே. இவர்கள் மத்தியில் இருதய நோயாளிகள், மற்றும் பல்வேறு நோய்நொடிகளினால் பீடிக்கப்பட்டு மருத்துவத்தேவைக்காக வந்திருந்தவர்களும், கொலை அச்சுறுத்தல்களினால் தப்பியோடிவந்து மறைந்திருந்தவர்கள், ஓரிருநாட்களில் தமது திருமணத்திற்காக மணமகனை எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 300ற்கும் மேற்பட்டதாக இருந்தது. இச்சம்பவம் இடம்பெறுவதற்கு ஓரிருதினங்களுக்குமுன் அதாவது ஆனி மாதம் 1ம் திகதி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ்மாஅதிபர் கூறியதாவது, எவ்விதகாரணமுமின்றி கொழும்பில் தமிழினத்தவர்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கக்கூடாதென்பதாகும். இவ்வாறு எவ்விதகாரணமுமின்றி அல்லது எதுவும் கூறாமல் தமிழினத்தவர்களை மிகவுங்குறுகிய ஒரு நேரத்தினுள்

நாங்கள் அறியாத செஷ் (CHESS)

உங்களது பேச்சு பேச்சாற்றலில் சரியாக இருந்தாலும் அது உலகநியதியல்ல. தற்பொழுது அரசு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கென நேர்மையாகச் செயற்படுகின்றது. இதற்கிடையில் மனிதஉரிமை தொடர்பாக பேசும்போது ஏற்படுவது என்னவெனில் தீவிரவாதத்தை தோற்கடிப்பது மந்தநிலைக்கு செல்வதாகும். மேற்குறிப்பிட்ட பதில் எனக்குக் கிடைத்தது இரண்டு வாரங்களுக்குமுன் க…….. நகரில் இடம்பெற்ற மனிதஉரிமை தொடர்பான கலந்துரையாடலின் போதாகும்.

ஆயுதந்தாங்கிய குழுக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்ததையடுத்து, மனிதஉரிமை மீறல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான கேள்வி அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது. கொலைகள், காணாமற்போதல்கள், கடத்தப்படல், சிறார்களை போரிலீடுபடுத்துதல், சித்திரவதைசெய்தல், சிவில் சமூகத்தினருக்கெதிராக யுத்தத்தாக்குதல்கள் உட்பட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் ஏதாவதொரு ஏற்பாட்டை மேற்கொள்ள பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் நிறுவனம் முன்வரவில்லையென்பதுடன், எவ்வித தண்டனையும் வழங்கப்படாமல் பயமில்லாமல் விரும்பியபடி குற்றச்செயல்கள் செய்வதற்கான வழிவகைகள் தோன்றியுள்ளதுடன், தேசிய மனிதஉரிமை ஆணைக்குழு தமக்கு சட்டரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாத நிலையொன்று தோன்றியுள்ளதாக குறிப்பிட்ட நான், எல்.ரி.ரி.ஈயினரின் கட்டுப்பாட்டு பிரதேசமுட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் இடம்பெறும் மனிதஉரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்வதற்கும், அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் அதிகாரமுடைய சர்வதேச மனிதஉரிமை செயற்திட்டமாகிய

பழக்கப்பட்ட கதைபோலுள்ளதா? நன்றாக ஞாபகப்படுத்திப் பாருங்கள்

மத்திய லண்டனில் தீவிரவாத தாக்குதலொன்று இடம்பெற்று ஆறு பேர் இறந்ததுடன், மேலும் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லண்டன் நகரத்தினுள் அரசியல் பிரச்சாரங்கள் இடம்பெறுவது தற்போதைக்கு தடைசெய்துள்ள பிரதமர் ஹபயாஸ் கோபூஷ், சட்டத்தினை அகற்றுமாறு கட்டளையிடுகின்றார் (கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரொருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவரும்படி பொதுமக்கள் கட்டளையிட வழிசமைக்கும் சட்டம்). ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் பொலிஸ் ஆணையாளரின் கருத்தின்படி, 10000ற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் மிகவும் சுதந்திரமாக லண்டன் நகரத்தினுள் நடமாடுகின்றனரென்பதாகும். நகரைப் பாதுகாக்கும்முகமாக 50000ற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீர், கால்வாய்களினுள் வெடிபொருட்கள் (வெடிப்படையும்) தீவிரவாதிகளினால் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாமென்பதனை கண்டறியும்முகமாக பொலிஸின் மேற்பார்வையின்கீழ் விஷேட படையொன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாராணியும் இந்நிலைமைதொடர்பில்

இடைவேளையின்பின் மீண்டும் உங்களுடன்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின்பின் எம்மால் பேசமுடியாத ஒரு காலகட்டம் உருவாகியது. “பேசமுடியாத இடத்தில் அமைதிகாக்க வேண்டும்” என்ற வித்கஸ்டயின் என்பவரின் கருத்திற்கிணங்க “சமபிம தற்காலிகமாக அமைதிபேணியது”.

உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் பேச்சுச்சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கம், சிவில்சமூகம் போன்ற மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் அவசியமாகியது. அந்த அமைதியான காலகட்டத்தின்போது எமது சக்தியினையும், நேரத்தினையும் நாம் அவ்வாறானதொரு மக்கள் சக்தியினை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்தினோம்.

தற்பொழுது நாம் மீண்டும் “சமபிம”வினை ஆரம்பிக்கத்தீர்மானித்துள்ளோம்.