Wednesday, October 8, 2008

கெட்டவர்களுக்கெதிராவதன் சவால்


ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை கவுன்சிலின் 7ஆவது அமர்வு கடந்த வாரம் ஜெனிவாவில் முடிவுற்றது. முன்னைய நேரஅட்டவணையின் பிரகாரம் மார்ச் 28ஆவது நாள் முடிவுறவேண்டியிருந்து பின் இன்னுமொரு அரைவாசி நாளுக்காக அமர்வு நீடிக்கப்பட்டது. ஜக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் வாரிசாக கிடைத்த மனிதஉரிமை கவுன்சில் இன்னும் அதன் இளமைப் பருவத்திலுள்ளது. இதனால் இம்முறை அமர்வின்போது கூடிய கவனம் மனிதஉரிமை கவுன்சிலின் வளர்ச்சியிலும் மனிதஉரிமை தொடர்பில் உயர்தானிகர் அலுவலகத்திற்கும் கவுன்சிலுக்குமான தொடர்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பன கலந்துரையாடப்பட்டது. (மனிதஉரிமை உயர்தானிகர் பதவி ஐக்கிய நாட்டு உயர்செயலாளரினால் நியமிக்கப்படுவதுடன் கவுன்சில் உயர்சபையின் கீழியங்கும் ஒரு நிறுவனமுமாகும்) கவுன்சில் இறுதியாக யாருக்கு பொறுப்புக்கூற வேண்டுமென்பது இன்னும் முடிவாக்கப்படவில்லை.

No comments: