Tuesday, October 28, 2008

சிங்கத்தின் வாயிலுள்ள மணங்களைப்பற்றி முயலிடம் கேட்பதைப்போல

ஒரேயொரு ஊரில் காட்டில் ராஜாவாக சிங்கம் தெரிவுசெய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும் காட்டில் அரசன் சிங்கமென்பதால் இதனை பழையகதையென்று நீங்கள் எண்ணக்கூடும். இருப்பினும் இந்த சிங்கம் வழமையாகவே மீருகங்களைக் கொன்று பச்சையாக உண்டுவிட்டபின் தமக்குக்கீழுள்ள பொதுமக்களிடம் தனது வாயின் துர்நாற்றத்தைப் பற்றி விசாரிப்பது வழமையாகவே இருந்தது. ஒரு நாள் சிங்கம் இக்கேள்வியை முயலிடம் கேட்டது முயல் முகங்கொடுத்த நிலைமை பரிதாபமாக இருந்தது. சிங்கத்தின் வாயிலிருந்து துர்நாற்றமெழுவதாகக் கூறினால் சிங்கத்தை ஏழனஞ் செய்வதாகப்போய்விடும், இதனால் முயலிற்கு மரணதண்டனை வழங்கப்படும். சிங்கத்தின் வாய் நறுமணமுள்ளததெனக் கூறினால் பொய்கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரணம் சம்பவிக்கப்படும். இதனால் முயல் தன்னை காப்பாற்றிக்கொள்ள கூறியவிடயமென்னவெனில் தற்பொழுது தடிமல் இருப்பதால் மணங்குணந் தெரியாமலுள்ளது எனக்கூறி தன்னை காப்பாற்றிக்கொண்டது.

Read more....

No comments: